Thursday, June 10, 2010

ஒரு நாயகன் உதயமாகிறான் -ஜில்லுனு ஒரு காத‌ல்


மக்களே... தலைவரோட ப்ளாக் பார்த்தீங்கன்னா படிப்பார் எவருமின்றி பாவமாக இருந்தது. ஆனால் கவிதைகள் ஒவ்வொன்றும் சும்மா சொல்லக்கூடாது,அத்தனை அழகாய் இருக்கும். அப்ப்டி ஒரு சொல் நயம் பொருள் நயத்தோட புலவர் பின்னியிருப்பார். நமக்கு வேற கவிதையே எழுத வராதா... அப்படியே எழுதினாலும் எல்லோரும் "ஏம்மா உனக்கு இந்த வேலை"னு பின்னூட்டத்தில் கலாய்ப்பாங்க... அதனால நல்ல கவிதைகளை பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சு. சரி, இவ்வளவு அருமையான கவிதைகள் அனாதையாய் இருக்கின்றனவே என்று பரிதாபப்பட்டு, எல்லோரையும் போல கமென்ட் போடற‌தோட நிற்காமல் "உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டி போன்றவற்றில் ஏன் இணைக்கவில்லை"னு கேட்டு, 'சரி இவருக்கு அதெல்லாம் தெரியாது போல இருக்கு'னு நெனச்சு என் மெயில் ஐடி கொடுத்தேங்க... கொடுத்ததும் பதிலுக்கு மெயில் ஐடி கொடுக்க வேண்டியததுதானே... உடனே செல்போன் நம்பர்தான் பதிலா வந்தது.

ரொம்பவும் யோசிச்சு சரி ஒரு உதவி தானே போனா போகுதுனு "ஹாய் திஸ் இஸ் ...."னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.(அன்னிக்கு நான் வேற ஆஃபீஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்ல வெட்டியா உக்காந்துட்டு இருந்தேன்.பொழுது போகல. அதுவும் ஒரு காரணம்). நம்ம ஜாக்கு ஆஃபீஸ்ல பயங்கர பிஸி. உடனே கால் பண்ணிட்டார். அப்புறமென்ன? அப்பவே ரெண்டு பேரும் சேர்ந்து அவ‌ரோட‌ வ‌லைப்ப‌க்க‌த்தை திர‌ட்டி மாதிரியான‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இணைச்சுட்டோம்.

அதுக்க‌ப்புறமும் த‌லைவ‌ர் அட‌ங்க‌‌வே இல்லை. டெம்ப்ளேட் மாத்த‌லாமா, எப்ப‌டி மாத்த‌ற‌து, எந்த‌ டெம்ப்ளேட் ந‌ல்லா இருக்கும், பாலோய‌ர்ஸ் விட்ஜெட் வ‌ர‌லையே என்ன‌ ப‌ண்றது, இன்னிக்கு ஒரு போஸ்ட் போட்டேன் அதை எப்ப‌டி த‌மிழ் ம‌ண‌த்தில் அப்டேட் ப‌ண்றது, உங்க ப்ளாக் ஃபுல்லா ப‌டிச்சேங்க‌, அந்த‌ க‌தை சூப்ப்ப‌ர்ர், இன்னிக்கு நீங்க என்ன சாப்ப்டீங்க‌, ஆஃபீஸ்க்கு டெய்லி ப‌ஸ்லியா போறீங்க‌ கூட்ட‌மா இருக்குமே அதுவும் சென்னைல‌, நீங்க எந்த காலேஜ், நான் காலேஜ்ல ரொம்ப வால்பைய‌னாக்கும் அப்ப‌டி இப்ப‌டினு க‌ட‌லைய‌ வ‌றுத்து வ‌றுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தார்.
ந‌டுவில் அவங்க சித்தி வீட்டுக்கு போய் அங்க இருக்கிற குட்டீஸ் கூட பேச‌ விட்டு இம்ப்ரெஸ் ப‌ண்ணுவார். ஃப்ரென்ட்ஸையெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காம நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் அப்படிங்கற மாதிரி பேசுவார்.(இதே ஜாக்கு பின்னொரு நாள் எங்கள் கடற்கரை சந்திப்பில் தூரத்தில் ஒரு நண்பனை பார்த்து விட்டு, அந்த நண்பனே இவரை கண்டுக்கொள்ளாத போதும், என்னை அலையில் தனியாக நிறுத்தி விட்டு(:(), "டேய் டேய்... நண்பா"னு, கத்திகிட்டே அவன் பின்னாடி ஓடி கைகுலுக்கிட்டு தான் திரும்பி வந்தார். இந்த கதையை நான் இன்னொரு நாள் விலாவாரியாக சொல்றேன்).

இப்போ உங்க யாருக்காவ‌து க‌ட‌லை வ‌றுப்ப‌து எப்ப‌டிங்க‌ற த‌லைப்பில் ஏதாவ‌து சந்தேக‌ம் இருந்தால் ஜாக்கை கேட்க‌லாம். த‌லைவ‌ர் அதுல‌ பி.ஹெச்.டி. போனை கையில எடுத்தார்னா ஒண்ணு அவர் மொபைல் பேட்டரி லோனு ஸ்விட்ச் ஆஃப் ஆகணும், இல்லைனா என்னோடது ஸ்விட்ச் ஆஃப் ஆகணும். அப்படி இல்லைனா என் அப்பா கால் வெயிட்டிங்க்ல இருந்து நானே இவர் call-ஐ கட் பண்ணனும். அது வரைக்கும் செல்போனை காதிலிருந்து ஒரு இன்ச் நகர்த்த மாட்டார். இப்ப‌டி மணிக்கணக்கில் அவ‌ர் பேச நான் கேட்க, நான் பேச அவ‌ர் கேட்க... அவரோட‌ வோடஃபோன் போஸ்ட்பெயிட்டில் பில்லு ஏற... அப்புற‌மென்ன "ஜில்லுனு ஒரு காத‌ல்தான்"

6 comments:

வால்பையன் said...

//தலைவரோட ப்ளாக் பார்த்தீங்கன்னா படிப்பார் எவருமின்றி பாவமாக இருந்தது.//

இதெல்லாம் டூமச், திரீமச்

வால்பையன் said...

//கவிதைகள் ஒவ்வொன்றும் சும்மா சொல்லக்கூடாது,அத்தனை அழகாய் இருக்கும். //

ஆனா படிச்சா தான் புரியாது!

வால்பையன் said...

//ஒரு சொல் நயம் பொருள் நயத்தோட புலவர் பின்னியிருப்பார்.//

ஆமா செமத்தியா அடி பின்னியிருப்பார்!

வால்பையன் said...

//நான் காலேஜ்ல ரொம்ப வால்பைய‌னாக்கும்//

என் பெயரை தவறா யூஸ் பண்ணியிருக்கார், கோர்ட்ல கேஸ் போட போறேன்!

வால்பையன் said...

//அவங்க சித்தி வீட்டுக்கு போய் அங்க இருக்கிற குட்டீஸ் கூட பேச‌ விட்டு இம்ப்ரெஸ் ப‌ண்ணுவார்.//


குட்டீஸை கேட்டு பாருங்க, அவருக்கு வேலையே இது தானாம்!

வால்பையன் said...

//ஃப்ரென்ட்ஸையெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காம நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் அப்படிங்கற மாதிரி பேசுவார்.//

எப்போ பார்த்தாலும் போன் பிஸியாவே இருந்தா எப்படி ஃப்ரெண்ட்ஸ் பேசுவாங்க!?