Thursday, July 1, 2010

ஜில்லு இப்போ உனக்கு தாண்டா!

கடலை நன்றாக வறுபடத்தொடங்கிய நேரம், கடலை வறுத்தெடுக்க மணல் போடும் விதமாக நான் செல்லப்பெயர், கொஞ்சல் மொழி என அம்மணிக்கு நாலாபுறமும் செக் வைக்கத் தொடங்கினேன்.

எல்லா ஃபிகரையும் போல சுதாரித்துக்கொண்டவள் "எங்கப்பா ஏற்கனவே முடிவு பண்ணிட்டார்,மாப்பிள்ளை ரெடி" என்றெல்லாம் சீன் போட தொடங்கினாள்.

நானோ கொஞ்சமும் அசராமல் "யாரந்த அதிர்ஷ்டசாலி" என கடலையில் கொஞ்சம் பனைவெல்லம் சேர்த்தேன். (நாம தான் ஸ்மெல் பண்ற டாக் மூஞ்சியைப் பார்த்தே கண்டுப்பிடிச்சுடுவோமே!!! )அதுவுமில்லாம அடுத்தவன் ஃபிகரை கரெக்ட் பண்றதுல இருக்கற ஆனந்தம் இருக்கே! அடடா! சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை...

அடுத்த நாள் மாலை நான் வழக்கம் போல கால் செய்யாததால் வருத்தம் கொண்ட போண்டாக்கோழி(இந்த விஷயம் பாப்பாக்கு தெரிய வேணாம். ரொம்ப வருத்தப்படும்:( )குறுந்தகவல் மூலம் கொஞ்சினாள்;

அன்று என் மாமன் மகளின் பர்த்டே!(அட நாலாங்கிளாஸ் தாங்க படிக்குது) அதனால நான் என் மாமன் பொண்ணை பார்க்க போறதா குறுந்தகவல் அனுப்ப அம்மணி தன்னைத்தான் சொல்றதா கோக்குமாக்கா புரிஞ்சுக்கிட்டு, "சரி வாங்க மச்சான் சீக்கிரம்"னு மெசேஜ் அனுப்பிட்டா...(பாவம் கொஞ்சம் புத்திசுவாதீனம் இல்லையாக்கும்) அப்படிப்போடு அரிவாளை... அயிரை மீனு மாட்டுச்சுனு அந்த பக்கம் படகை திருப்பினா திடீர்னு நெளியறா... நழுவுறா.. படாத பாடு படுத்திட்டாப் போங்க.. கடைசியா மூணு மணி நேரம் முக்கல் முனகலுக்கு பிறகு முத்தத்துடன் முற்றுப்புள்ளி வெச்சேன் பஞ்சாயத்துக்கு(அட ஃபோன்ல தாங்க‌...) அப்போத்தான் ஆரம்பிச்சுது,


"ஜில்லுன்னு ஒரு காதல்"

3 comments:

Jack said...

ஜில்லு

ஜில்லு

ஜில்லு


















































ஒண்ணுமில்ல




மைக் டெஸ்டிங்!

வால்பையன் said...

சொந்த செலவுல சூனியம் வச்சிகிரிங்களே!

இந்த போஸ்டை சொல்றேன்!

அம்மணி, இந்த போஸ்டை வச்சு என் பங்காளியை பின்னாளில் பூரிகட்டையால அடிச்சிராதிங்க, அப்படியே அடிச்சாலு பெருசா வீங்காத மாதிரி அடிங்க, பாங்காளி வலி தாங்க மாட்டாரு!

vinu said...

ennapa ithu kanakku thappa kaattuthu 2 commentsnu pottu oru comment thaaaan kaaaatttuthu


ok ok roamba late pannatheengapa seekiram next post ok