Wednesday, February 16, 2011

ஊர் சுத்தலாம் வாங்க....

        

            தலைப்புல இருக்குற மாதிரி கூப்பிட்டது நானில்லீங்க. நம்ம ஜாக்கு தான். தலைவர் சென்னை வந்து பார்த்த இரண்டாம் மாதமே எப்படியோ கெஞ்சி கூத்தாடி, என்னை ஆஃபீஸ் பங்க் செய்ய வைத்து, ஊர் சுத்த சம்மதிக்க வைக்க வெச்சுட்டாரு. முதல் நாள் மாலை கடற்கரையில் கட்லை வறுபடும் போதே இதை சாதித்தாகி விட்டது. இந்த ஜாக்கு வேற சென்னைக்கு புதுசா... அடுத்த நாள் எங்க போறதுன்னு ரெண்டு பேருக்குமே தெரியலை. நாள் முழுக்க வேற சுத்தணுமா? அப்புறம் வி.ஜி.பி போகலாம்ன்னு எனக்கு தோணுச்சு. நமக்கு தீம்பார்க்ன்னா ரொம்ப பிடிக்கும் வேறயா? சரி அங்கயே போயிடுவோம்ன்னு ஜாக்கும் ஓகே சொல்லியாச்சு.... 

          சென்னையில் பயன்படுத்த பைக் எதுவும் இல்லாததால் பஸ்ஸில் தான் பயணம். எனக்கு இப்ப வரைக்கும் ட்ரைவிங்க் தெரியாததால்,(ஒரே பெருமை தான் போ) ஸ்கூட்டியும் கைவசம் லேது. எனவே அடுத்த நாள் பஸ்ஸில் போவதென்று முடிவு செய்தாகி விட்டது(ஏரியால அத்தனை ஆட்டோக்காரர்களுக்கும் என் அப்பாவை தெரியும். வேறு வழி?). சென்னையின் பீக் ட்ராஃபிக் நேரத்தில் 29c எப்படி இருக்குமென்பதை சென்னைவாசிகள் அறிவர்.  அந்த பஸ்ஸில் நாங்களும் நசுங்கி பிறயும் நசுக்கி  சைதாப்பேட்டையில் இறங்கி இன்னொரு பஸ்ஸை பிடித்து விஜிபி வந்து சேர்ந்தாயிற்று...

                 நாங்கள் 9.30மணிக்கே வேறு போய் விட்டோம். பின்னே நான் வீட்டிலிருந்து ஆஃபீஸ் கிளம்பற மாதிரி 7.30க்கே கிளம்பியாச்சே.... அங்கே அப்போதுதான் துப்புரவு பணியாளர்களே தங்கள் வேலையை தொடங்கியிருந்தன்ர். ‘விடிஞ்சா போதும் கெளம்பி வந்துருதுங்க’ என்பது போல எங்களை பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தனர். நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் போலத்தான் இருக்கும். இருந்தாலும் நாங்கள் அசருவோமா?? இத்தனையும் சமாளிச்சு உள்ளே போனால், வார நாட்களில் நிறைய ரைட்ஸ் இயக்க மாட்டார்களாம்... அங்க மொத்தம் இருக்கறதே பத்து ரைட்ஸ்தான்.

                         சரி ஏதாவது ரைட் ஆரம்பிக்கற வரைக்கும் சாப்பிடலாம் என்று அதையும் முடித்தோம். சில மணி நேரம் கழித்து பெங்காலி டூரிஸ்டுகள் வந்ததும் தான் ரோலர் கோஸ்டரை இயக்கினர். ரோலர் கோஸ்டரில் பலரும் அலறவும் இந்த ஜாக்கு அதில் ஏறவே ஒத்துக்கவில்லை. நான் மிகவும் வற்புறுத்தி ஏறி விட, நான் கத்தி கொண்டே வந்தேன். (நமக்கு சத்தம் போட்டாத்தேன் பயம் தெரியாது). மிக கம்பீரமாக ஏறிய ஜாக், சுத்தமாக சத்தம் போடவே இல்லை. இறங்கி பிறகுதான் அவர் முகத்தை பார்க்க விளக்கெண்ணெய் குடித்தது போல் இருந்தார் பாவம். அதற்கு பிறகு பல முறை விஜிபி போன போதும், எந்த ரைடுக்கு கூப்பிட்டாலும் ஜாக்கு என்னை கையெடுத்து கும்பிடுவதோடு சரி...


10 comments:

மோனி said...

ஆக ...
ஜாக்கு கடைசியில
பேக்கு ஆயிட்டாப்டியா ?

JACK and JILLU said...

எப்படி மோனி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது...

அதே தான்

Butter_cutter said...

வெகு நாட்கள் கழித்து எழுத வந்த திற்கு வாழ்த்துக்கள் .நிறைய எழுதுங்க

vinu said...

இறங்கி பிறகுதான் அவர் முகத்தை பார்க்க விளக்கெண்ணெய் குடித்தது போல் இருந்தார் பாவம்.


kalyaanam annaikku irrunthathaipp polavaa



அதற்கு பிறகு பல முறை விஜிபி போன போதும், எந்த ரைடுக்கு கூப்பிட்டாலும் ஜாக்கு என்னை கையெடுத்து கும்பிடுவதோடு சரி...


yappaa saaami ithu ulaga nadippudaa



appaaala kalyaanam aanaalum aachu; rendu perayum ingittu aalyvea kaanom; ippothaan neram kidaichchuthaa;

ithula malarum ninaivugal veraaa;

nadakkattum nadakkattum;

yaaro enakku ponnu paarthu tharrathaa sonnaanga; aalayea kaanom

வால்பையன் said...

உங்க கல்யாணத்துக்கு நான் எந்த ஹிஃப்டும் கொடுக்கல,

வி.ஜி.பி க்கு ரெண்டு டிக்கெட் எடுத்து தரட்டுமா?

Rajan said...

//உங்க கல்யாணத்துக்கு நான் எந்த ஹிஃப்டும் கொடுக்கல,//

அது ஹிஃப்ட்டு இல்ல நைனா! கிஃப்ட்டு! ஸ்பெல்லிங்கே தெரியல! நீயா கிஃப்டு குடுக்கப்போற பங்கு!

Jillu said...

@சிட்டிபாபு ஊக்கத்திற்கு நன்றி

@வினு ஓய்... கல்யாணத்துக்கு வரவேல்ல இல்லை?? டோண்ட் டாக்கு

@வால்பையன் ஸ்பெல்லிங்க் சரியா சொல்லலன்னா பரவால்ல.. கிஃப்ட்ட கொடுங்க. போதும்.

Hari said...

jillu always busy uh?

Jillu said...

@hari anna

இல்லயே அண்ணா... நான் வெட்டிதான். (டவுட் இது மிட்டு தானே?)

உமர் | Umar said...

எப்போதுமே லேட்டா வர்றதே வேலையாப் போச்சு எனக்கு.