நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்;
என் கையெழுத்து!

அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!

உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை..,
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்துப் பார்க்கிறது!

வேறெவரும் தருவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!

மெல்லச் சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!
5 comments:
namma vootu pakkam varrathukkuthaan neramea illay polaaaaa.......
itho vanthitten irunga
//அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!//
வாவ்!
இது யார் கவிதை!
ஜாக்கா, ஜில்லா!
ஜாக்கு தான்.. ஜில்லுக்கு அவ்ளோ சரக்கில்ல
ஜாக்கு தான்... ஜில்லுக்கு அந்தளவுக்கு சரக்கு பத்தாது
Post a Comment