Showing posts with label எனக்கான உன் கவிதைகள். Show all posts
Showing posts with label எனக்கான உன் கவிதைகள். Show all posts

Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!

நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்;
என் கையெழுத்து!



அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை..,
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்துப் பார்க்கிறது!


வேறெவரும் தருவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!


மெல்லச் சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!