கடலை நன்றாக வறுபடத்தொடங்கிய நேரம், கடலை வறுத்தெடுக்க மணல் போடும் விதமாக நான் செல்லப்பெயர், கொஞ்சல் மொழி என அம்மணிக்கு நாலாபுறமும் செக் வைக்கத் தொடங்கினேன்.
எல்லா ஃபிகரையும் போல சுதாரித்துக்கொண்டவள் "எங்கப்பா ஏற்கனவே முடிவு பண்ணிட்டார்,மாப்பிள்ளை ரெடி" என்றெல்லாம் சீன் போட தொடங்கினாள்.
நானோ கொஞ்சமும் அசராமல் "யாரந்த அதிர்ஷ்டசாலி" என கடலையில் கொஞ்சம் பனைவெல்லம் சேர்த்தேன். (நாம தான் ஸ்மெல் பண்ற டாக் மூஞ்சியைப் பார்த்தே கண்டுப்பிடிச்சுடுவோமே!!! )அதுவுமில்லாம அடுத்தவன் ஃபிகரை கரெக்ட் பண்றதுல இருக்கற ஆனந்தம் இருக்கே! அடடா! சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை...
அடுத்த நாள் மாலை நான் வழக்கம் போல கால் செய்யாததால் வருத்தம் கொண்ட போண்டாக்கோழி(இந்த விஷயம் பாப்பாக்கு தெரிய வேணாம். ரொம்ப வருத்தப்படும்:( )குறுந்தகவல் மூலம் கொஞ்சினாள்;
அன்று என் மாமன் மகளின் பர்த்டே!(அட நாலாங்கிளாஸ் தாங்க படிக்குது) அதனால நான் என் மாமன் பொண்ணை பார்க்க போறதா குறுந்தகவல் அனுப்ப அம்மணி தன்னைத்தான் சொல்றதா கோக்குமாக்கா புரிஞ்சுக்கிட்டு, "சரி வாங்க மச்சான் சீக்கிரம்"னு மெசேஜ் அனுப்பிட்டா...(பாவம் கொஞ்சம் புத்திசுவாதீனம் இல்லையாக்கும்) அப்படிப்போடு அரிவாளை... அயிரை மீனு மாட்டுச்சுனு அந்த பக்கம் படகை திருப்பினா திடீர்னு நெளியறா... நழுவுறா.. படாத பாடு படுத்திட்டாப் போங்க.. கடைசியா மூணு மணி நேரம் முக்கல் முனகலுக்கு பிறகு முத்தத்துடன் முற்றுப்புள்ளி வெச்சேன் பஞ்சாயத்துக்கு(அட ஃபோன்ல தாங்க...) அப்போத்தான் ஆரம்பிச்சுது,
"ஜில்லுன்னு ஒரு காதல்"
Showing posts with label ஜில்லு. Show all posts
Showing posts with label ஜில்லு. Show all posts
Thursday, July 1, 2010
Friday, June 18, 2010
ஆன்லைன் காதல் - போட்டோஷாப் ஜாக்கிரதை!

போன்ல தொடங்கற ஆண் நட்புக்களிடம் எப்பவுமே எனக்கு பயம் கொஞ்சம் அதிகம். முகம் பார்க்காம பேச ஆரம்பிக்கறதால, ஈர்ப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதனால முதல்ல நட்புனு ஆரம்பிச்சு, கடலை வறுத்துக்கொண்டே காதலுக்கு போய் விடலாம் இத்தகைய உறவுகள். அதுவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. சரி பார்க்காம பேசினாத்தானே இந்த பிரச்சினையெல்லாம், ஒரு போட்டோ மெயில்ல அனுப்பிட்டா??? இப்படி ஒரு கெரகம் பிடிச்ச யோசனை எனக்கு எப்படி வந்தது என்றே தெரியலை.
பையன் சில கொக்கி கேள்விகள் போடும் போதே நான் ரொம்ப புத்திசாலித்தனமா "சரி என் போட்டோ அனுப்பறேன். பாருங்க. ஆனா பார்த்துட்டு உடனே டெலிட் பண்ணிடணும்"னு நிபந்தனைகளோடு நம்ம்ம்பி என் புகைப்படத்தை அனுப்பினேன். அந்த நாள்... என் வாழ்க்கையை இப்படி தலைகீழா திருப்பி போட்டுடுச்சு... பையன் அடுத்த நாள்ல இருந்து தான் இன்னும் அதிகமா கடலை வறுக்க ஆரம்பிச்சான். ஆனா போட்டோவை பத்தி மூச்... வாயே திறக்கலை. எனக்கு என்ன காரணம்னு தெரியவே இல்லை. நான் எப்படி இருந்தேன்னு கேக்கறதுக்கும் அவமானமா இருந்துச்சு. அப்புறம் பிற்காலத்துல தான் புரிஞ்சுது... இவன் ஒரு ப்ளானோடதான் சுத்திட்டு இருந்திருக்கான். இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை டீல்ல விட்டு மொத்தமா பிடிச்சுட்டான்.
நம்ம ஜாக்கு இலக்கிய சேவை செஞ்சுக்கிட்டு இருக்கற அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல அழகாக இருப்பான். சரி இத்தனை அழகா இருக்கற பையன் நம்ம போட்டோவை பார்த்து மயங்க மாட்டான் அப்படின்னு மறுபடியும் நம்ம்ம்பி நான் பெரிசாக இவன் கடலையை கண்டுக்கலை. இருந்தாலும் இவரை இன்னும் ஸ்ட்ரெய்ட் போஸ்ல பார்க்கலையேன்னு அப்ப்டி ஏதாவது போட்டோ அனுப்புங்கன்னு கேட்க சரி அனுப்பறேஎன்னு சொன்னவர் ரெண்டு வாரம் கழிச்சு தான் அனுப்பினார். அப்போத்தான் புரிஞ்சுது போட்டோ ஷாப்ல இவர் என்னென்ன தில்லாலங்கடி வேலைல்லாம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சுது. அந்த ப்ளாக்ல இவர் அப்ப்டி எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு தங்க கலர்ல மின்னிட்டு இருப்பார்.ஆனா உண்மைல பையன் கருப்புதான். இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்... ஹ்ம்ம்ம் இனி என்ன பண்றது? அதுக்கப்புறம் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" என்னோட காலர் ட்யூனாயிடுச்சு. அப்புறம் என்ன?
"ஜில்லுன்னு ஒரு காதல்" தான்....
Monday, June 7, 2010
ஜில்லுனு ஒரு காதல் - தலைவி கூற்று அறிமுகம்

நண்பர்களே...நான் ஜில்லு... இந்த ஜாக்கு சொல்லுறதை எல்லாம் அப்படியே நம்ப வேண்டாம். ஜோ மட்டுமில்ல எந்த பொண்ணை பார்த்தாலும் பட்டிகாட்டான் மிட்டாய் கடையை முறைக்கற மாதிரி ஜொள்ள வேண்டியது... முதல்முதல்ல நாங்க சந்திச்ச போது கூட அப்படித்தான் முறைச்சுக்கிட்டு இருந்தான். நாங்களாவது ஏதோ குட்டி 'சோதிகா'னு தான் நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா இவருக்கு மனசுல பெரிய டாம் க்ரூஸ்னு நெனப்பு...(மொத்தத்திலே ரெண்டு பேருமே ஒரு மார்க்கமாத்தான் சுத்தறீங்களா... கஷ்ட காலம்னு புலம்பறீங்களா... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்... கண்டுக்காதீங்க). சட்டைல ஒவ்வொரு பக்கமும் நாலு நாலு பாக்கெட்.சரி சட்டை தான் இப்படினா பேன்ட்ல நாலு கயிறு அங்கங்க தொங்கும்... கேட்டா ஃபேஷனாமாம். என்னமோ ரொம்ப ஸ்டைல் பண்றதா நெனச்சு விரலை விதவிதமா வித்தை காட்டிட்டு முகத்தில ஒரு பெருமிதத்தோட ஒரு லுக்கு விடுவான் பாருங்க... ம்ம்ம்ம்... சரி ஒழிஞ்சு போகட்டும். அப்புறம் அதென்ன இவ்ளோ ஓட்டிட்டு பப்பி, புஜ்ஜினு கொஞ்சுறது...கேடி... ம்ம்ம் இந்த மாதிரி ஜாக்குகள் கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் இருக்கணும். ஆனாலும் நம்ம ஜாக்கை எவ்ளோ வேணா ஓட்டலாங்க... கடைசியா என்னங்கனு கொஞ்சமே கொஞ்சம் கொஞ்சினா போதும். பையன் ஃப்ளாட்... ம்ம்ம் இப்படித்தான் வாழ்க்கை போகுது..........
Subscribe to:
Posts (Atom)