கடலை நன்றாக வறுபடத்தொடங்கிய நேரம், கடலை வறுத்தெடுக்க மணல் போடும் விதமாக நான் செல்லப்பெயர், கொஞ்சல் மொழி என அம்மணிக்கு நாலாபுறமும் செக் வைக்கத் தொடங்கினேன்.
எல்லா ஃபிகரையும் போல சுதாரித்துக்கொண்டவள் "எங்கப்பா ஏற்கனவே முடிவு பண்ணிட்டார்,மாப்பிள்ளை ரெடி" என்றெல்லாம் சீன் போட தொடங்கினாள்.
நானோ கொஞ்சமும் அசராமல் "யாரந்த அதிர்ஷ்டசாலி" என கடலையில் கொஞ்சம் பனைவெல்லம் சேர்த்தேன். (நாம தான் ஸ்மெல் பண்ற டாக் மூஞ்சியைப் பார்த்தே கண்டுப்பிடிச்சுடுவோமே!!! )அதுவுமில்லாம அடுத்தவன் ஃபிகரை கரெக்ட் பண்றதுல இருக்கற ஆனந்தம் இருக்கே! அடடா! சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை...
அடுத்த நாள் மாலை நான் வழக்கம் போல கால் செய்யாததால் வருத்தம் கொண்ட போண்டாக்கோழி(இந்த விஷயம் பாப்பாக்கு தெரிய வேணாம். ரொம்ப வருத்தப்படும்:( )குறுந்தகவல் மூலம் கொஞ்சினாள்;
அன்று என் மாமன் மகளின் பர்த்டே!(அட நாலாங்கிளாஸ் தாங்க படிக்குது) அதனால நான் என் மாமன் பொண்ணை பார்க்க போறதா குறுந்தகவல் அனுப்ப அம்மணி தன்னைத்தான் சொல்றதா கோக்குமாக்கா புரிஞ்சுக்கிட்டு, "சரி வாங்க மச்சான் சீக்கிரம்"னு மெசேஜ் அனுப்பிட்டா...(பாவம் கொஞ்சம் புத்திசுவாதீனம் இல்லையாக்கும்) அப்படிப்போடு அரிவாளை... அயிரை மீனு மாட்டுச்சுனு அந்த பக்கம் படகை திருப்பினா திடீர்னு நெளியறா... நழுவுறா.. படாத பாடு படுத்திட்டாப் போங்க.. கடைசியா மூணு மணி நேரம் முக்கல் முனகலுக்கு பிறகு முத்தத்துடன் முற்றுப்புள்ளி வெச்சேன் பஞ்சாயத்துக்கு(அட ஃபோன்ல தாங்க...) அப்போத்தான் ஆரம்பிச்சுது,
"ஜில்லுன்னு ஒரு காதல்"
Showing posts with label போன். Show all posts
Showing posts with label போன். Show all posts
Thursday, July 1, 2010
Friday, June 18, 2010
ஆன்லைன் காதல் - போட்டோஷாப் ஜாக்கிரதை!

போன்ல தொடங்கற ஆண் நட்புக்களிடம் எப்பவுமே எனக்கு பயம் கொஞ்சம் அதிகம். முகம் பார்க்காம பேச ஆரம்பிக்கறதால, ஈர்ப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதனால முதல்ல நட்புனு ஆரம்பிச்சு, கடலை வறுத்துக்கொண்டே காதலுக்கு போய் விடலாம் இத்தகைய உறவுகள். அதுவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. சரி பார்க்காம பேசினாத்தானே இந்த பிரச்சினையெல்லாம், ஒரு போட்டோ மெயில்ல அனுப்பிட்டா??? இப்படி ஒரு கெரகம் பிடிச்ச யோசனை எனக்கு எப்படி வந்தது என்றே தெரியலை.
பையன் சில கொக்கி கேள்விகள் போடும் போதே நான் ரொம்ப புத்திசாலித்தனமா "சரி என் போட்டோ அனுப்பறேன். பாருங்க. ஆனா பார்த்துட்டு உடனே டெலிட் பண்ணிடணும்"னு நிபந்தனைகளோடு நம்ம்ம்பி என் புகைப்படத்தை அனுப்பினேன். அந்த நாள்... என் வாழ்க்கையை இப்படி தலைகீழா திருப்பி போட்டுடுச்சு... பையன் அடுத்த நாள்ல இருந்து தான் இன்னும் அதிகமா கடலை வறுக்க ஆரம்பிச்சான். ஆனா போட்டோவை பத்தி மூச்... வாயே திறக்கலை. எனக்கு என்ன காரணம்னு தெரியவே இல்லை. நான் எப்படி இருந்தேன்னு கேக்கறதுக்கும் அவமானமா இருந்துச்சு. அப்புறம் பிற்காலத்துல தான் புரிஞ்சுது... இவன் ஒரு ப்ளானோடதான் சுத்திட்டு இருந்திருக்கான். இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை டீல்ல விட்டு மொத்தமா பிடிச்சுட்டான்.
நம்ம ஜாக்கு இலக்கிய சேவை செஞ்சுக்கிட்டு இருக்கற அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல அழகாக இருப்பான். சரி இத்தனை அழகா இருக்கற பையன் நம்ம போட்டோவை பார்த்து மயங்க மாட்டான் அப்படின்னு மறுபடியும் நம்ம்ம்பி நான் பெரிசாக இவன் கடலையை கண்டுக்கலை. இருந்தாலும் இவரை இன்னும் ஸ்ட்ரெய்ட் போஸ்ல பார்க்கலையேன்னு அப்ப்டி ஏதாவது போட்டோ அனுப்புங்கன்னு கேட்க சரி அனுப்பறேஎன்னு சொன்னவர் ரெண்டு வாரம் கழிச்சு தான் அனுப்பினார். அப்போத்தான் புரிஞ்சுது போட்டோ ஷாப்ல இவர் என்னென்ன தில்லாலங்கடி வேலைல்லாம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சுது. அந்த ப்ளாக்ல இவர் அப்ப்டி எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு தங்க கலர்ல மின்னிட்டு இருப்பார்.ஆனா உண்மைல பையன் கருப்புதான். இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்... ஹ்ம்ம்ம் இனி என்ன பண்றது? அதுக்கப்புறம் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" என்னோட காலர் ட்யூனாயிடுச்சு. அப்புறம் என்ன?
"ஜில்லுன்னு ஒரு காதல்" தான்....
Thursday, June 10, 2010
ஒரு நாயகன் உதயமாகிறான் -ஜில்லுனு ஒரு காதல்

மக்களே... தலைவரோட ப்ளாக் பார்த்தீங்கன்னா படிப்பார் எவருமின்றி பாவமாக இருந்தது. ஆனால் கவிதைகள் ஒவ்வொன்றும் சும்மா சொல்லக்கூடாது,அத்தனை அழகாய் இருக்கும். அப்ப்டி ஒரு சொல் நயம் பொருள் நயத்தோட புலவர் பின்னியிருப்பார். நமக்கு வேற கவிதையே எழுத வராதா... அப்படியே எழுதினாலும் எல்லோரும் "ஏம்மா உனக்கு இந்த வேலை"னு பின்னூட்டத்தில் கலாய்ப்பாங்க... அதனால நல்ல கவிதைகளை பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சு. சரி, இவ்வளவு அருமையான கவிதைகள் அனாதையாய் இருக்கின்றனவே என்று பரிதாபப்பட்டு, எல்லோரையும் போல கமென்ட் போடறதோட நிற்காமல் "உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டி போன்றவற்றில் ஏன் இணைக்கவில்லை"னு கேட்டு, 'சரி இவருக்கு அதெல்லாம் தெரியாது போல இருக்கு'னு நெனச்சு என் மெயில் ஐடி கொடுத்தேங்க... கொடுத்ததும் பதிலுக்கு மெயில் ஐடி கொடுக்க வேண்டியததுதானே... உடனே செல்போன் நம்பர்தான் பதிலா வந்தது.
ரொம்பவும் யோசிச்சு சரி ஒரு உதவி தானே போனா போகுதுனு "ஹாய் திஸ் இஸ் ...."னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.(அன்னிக்கு நான் வேற ஆஃபீஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்ல வெட்டியா உக்காந்துட்டு இருந்தேன்.பொழுது போகல. அதுவும் ஒரு காரணம்). நம்ம ஜாக்கு ஆஃபீஸ்ல பயங்கர பிஸி. உடனே கால் பண்ணிட்டார். அப்புறமென்ன? அப்பவே ரெண்டு பேரும் சேர்ந்து அவரோட வலைப்பக்கத்தை திரட்டி மாதிரியான வலைப்பக்கங்களில் இணைச்சுட்டோம்.
அதுக்கப்புறமும் தலைவர் அடங்கவே இல்லை. டெம்ப்ளேட் மாத்தலாமா, எப்படி மாத்தறது, எந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கும், பாலோயர்ஸ் விட்ஜெட் வரலையே என்ன பண்றது, இன்னிக்கு ஒரு போஸ்ட் போட்டேன் அதை எப்படி தமிழ் மணத்தில் அப்டேட் பண்றது, உங்க ப்ளாக் ஃபுல்லா படிச்சேங்க, அந்த கதை சூப்ப்பர்ர், இன்னிக்கு நீங்க என்ன சாப்ப்டீங்க, ஆஃபீஸ்க்கு டெய்லி பஸ்லியா போறீங்க கூட்டமா இருக்குமே அதுவும் சென்னைல, நீங்க எந்த காலேஜ், நான் காலேஜ்ல ரொம்ப வால்பையனாக்கும் அப்படி இப்படினு கடலைய வறுத்து வறுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தார்.
நடுவில் அவங்க சித்தி வீட்டுக்கு போய் அங்க இருக்கிற குட்டீஸ் கூட பேச விட்டு இம்ப்ரெஸ் பண்ணுவார். ஃப்ரென்ட்ஸையெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காம நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் அப்படிங்கற மாதிரி பேசுவார்.(இதே ஜாக்கு பின்னொரு நாள் எங்கள் கடற்கரை சந்திப்பில் தூரத்தில் ஒரு நண்பனை பார்த்து விட்டு, அந்த நண்பனே இவரை கண்டுக்கொள்ளாத போதும், என்னை அலையில் தனியாக நிறுத்தி விட்டு(:(), "டேய் டேய்... நண்பா"னு, கத்திகிட்டே அவன் பின்னாடி ஓடி கைகுலுக்கிட்டு தான் திரும்பி வந்தார். இந்த கதையை நான் இன்னொரு நாள் விலாவாரியாக சொல்றேன்).
இப்போ உங்க யாருக்காவது கடலை வறுப்பது எப்படிங்கற தலைப்பில் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஜாக்கை கேட்கலாம். தலைவர் அதுல பி.ஹெச்.டி. போனை கையில எடுத்தார்னா ஒண்ணு அவர் மொபைல் பேட்டரி லோனு ஸ்விட்ச் ஆஃப் ஆகணும், இல்லைனா என்னோடது ஸ்விட்ச் ஆஃப் ஆகணும். அப்படி இல்லைனா என் அப்பா கால் வெயிட்டிங்க்ல இருந்து நானே இவர் call-ஐ கட் பண்ணனும். அது வரைக்கும் செல்போனை காதிலிருந்து ஒரு இன்ச் நகர்த்த மாட்டார். இப்படி மணிக்கணக்கில் அவர் பேச நான் கேட்க, நான் பேச அவர் கேட்க... அவரோட வோடஃபோன் போஸ்ட்பெயிட்டில் பில்லு ஏற... அப்புறமென்ன "ஜில்லுனு ஒரு காதல்தான்"
Subscribe to:
Posts (Atom)