
போன்ல தொடங்கற ஆண் நட்புக்களிடம் எப்பவுமே எனக்கு பயம் கொஞ்சம் அதிகம். முகம் பார்க்காம பேச ஆரம்பிக்கறதால, ஈர்ப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதனால முதல்ல நட்புனு ஆரம்பிச்சு, கடலை வறுத்துக்கொண்டே காதலுக்கு போய் விடலாம் இத்தகைய உறவுகள். அதுவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. சரி பார்க்காம பேசினாத்தானே இந்த பிரச்சினையெல்லாம், ஒரு போட்டோ மெயில்ல அனுப்பிட்டா??? இப்படி ஒரு கெரகம் பிடிச்ச யோசனை எனக்கு எப்படி வந்தது என்றே தெரியலை.
பையன் சில கொக்கி கேள்விகள் போடும் போதே நான் ரொம்ப புத்திசாலித்தனமா "சரி என் போட்டோ அனுப்பறேன். பாருங்க. ஆனா பார்த்துட்டு உடனே டெலிட் பண்ணிடணும்"னு நிபந்தனைகளோடு நம்ம்ம்பி என் புகைப்படத்தை அனுப்பினேன். அந்த நாள்... என் வாழ்க்கையை இப்படி தலைகீழா திருப்பி போட்டுடுச்சு... பையன் அடுத்த நாள்ல இருந்து தான் இன்னும் அதிகமா கடலை வறுக்க ஆரம்பிச்சான். ஆனா போட்டோவை பத்தி மூச்... வாயே திறக்கலை. எனக்கு என்ன காரணம்னு தெரியவே இல்லை. நான் எப்படி இருந்தேன்னு கேக்கறதுக்கும் அவமானமா இருந்துச்சு. அப்புறம் பிற்காலத்துல தான் புரிஞ்சுது... இவன் ஒரு ப்ளானோடதான் சுத்திட்டு இருந்திருக்கான். இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை டீல்ல விட்டு மொத்தமா பிடிச்சுட்டான்.
நம்ம ஜாக்கு இலக்கிய சேவை செஞ்சுக்கிட்டு இருக்கற அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல அழகாக இருப்பான். சரி இத்தனை அழகா இருக்கற பையன் நம்ம போட்டோவை பார்த்து மயங்க மாட்டான் அப்படின்னு மறுபடியும் நம்ம்ம்பி நான் பெரிசாக இவன் கடலையை கண்டுக்கலை. இருந்தாலும் இவரை இன்னும் ஸ்ட்ரெய்ட் போஸ்ல பார்க்கலையேன்னு அப்ப்டி ஏதாவது போட்டோ அனுப்புங்கன்னு கேட்க சரி அனுப்பறேஎன்னு சொன்னவர் ரெண்டு வாரம் கழிச்சு தான் அனுப்பினார். அப்போத்தான் புரிஞ்சுது போட்டோ ஷாப்ல இவர் என்னென்ன தில்லாலங்கடி வேலைல்லாம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சுது. அந்த ப்ளாக்ல இவர் அப்ப்டி எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு தங்க கலர்ல மின்னிட்டு இருப்பார்.ஆனா உண்மைல பையன் கருப்புதான். இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்... ஹ்ம்ம்ம் இனி என்ன பண்றது? அதுக்கப்புறம் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" என்னோட காலர் ட்யூனாயிடுச்சு. அப்புறம் என்ன?
"ஜில்லுன்னு ஒரு காதல்" தான்....