
போன்ல தொடங்கற ஆண் நட்புக்களிடம் எப்பவுமே எனக்கு பயம் கொஞ்சம் அதிகம். முகம் பார்க்காம பேச ஆரம்பிக்கறதால, ஈர்ப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதனால முதல்ல நட்புனு ஆரம்பிச்சு, கடலை வறுத்துக்கொண்டே காதலுக்கு போய் விடலாம் இத்தகைய உறவுகள். அதுவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. சரி பார்க்காம பேசினாத்தானே இந்த பிரச்சினையெல்லாம், ஒரு போட்டோ மெயில்ல அனுப்பிட்டா??? இப்படி ஒரு கெரகம் பிடிச்ச யோசனை எனக்கு எப்படி வந்தது என்றே தெரியலை.
பையன் சில கொக்கி கேள்விகள் போடும் போதே நான் ரொம்ப புத்திசாலித்தனமா "சரி என் போட்டோ அனுப்பறேன். பாருங்க. ஆனா பார்த்துட்டு உடனே டெலிட் பண்ணிடணும்"னு நிபந்தனைகளோடு நம்ம்ம்பி என் புகைப்படத்தை அனுப்பினேன். அந்த நாள்... என் வாழ்க்கையை இப்படி தலைகீழா திருப்பி போட்டுடுச்சு... பையன் அடுத்த நாள்ல இருந்து தான் இன்னும் அதிகமா கடலை வறுக்க ஆரம்பிச்சான். ஆனா போட்டோவை பத்தி மூச்... வாயே திறக்கலை. எனக்கு என்ன காரணம்னு தெரியவே இல்லை. நான் எப்படி இருந்தேன்னு கேக்கறதுக்கும் அவமானமா இருந்துச்சு. அப்புறம் பிற்காலத்துல தான் புரிஞ்சுது... இவன் ஒரு ப்ளானோடதான் சுத்திட்டு இருந்திருக்கான். இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை டீல்ல விட்டு மொத்தமா பிடிச்சுட்டான்.
நம்ம ஜாக்கு இலக்கிய சேவை செஞ்சுக்கிட்டு இருக்கற அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல அழகாக இருப்பான். சரி இத்தனை அழகா இருக்கற பையன் நம்ம போட்டோவை பார்த்து மயங்க மாட்டான் அப்படின்னு மறுபடியும் நம்ம்ம்பி நான் பெரிசாக இவன் கடலையை கண்டுக்கலை. இருந்தாலும் இவரை இன்னும் ஸ்ட்ரெய்ட் போஸ்ல பார்க்கலையேன்னு அப்ப்டி ஏதாவது போட்டோ அனுப்புங்கன்னு கேட்க சரி அனுப்பறேஎன்னு சொன்னவர் ரெண்டு வாரம் கழிச்சு தான் அனுப்பினார். அப்போத்தான் புரிஞ்சுது போட்டோ ஷாப்ல இவர் என்னென்ன தில்லாலங்கடி வேலைல்லாம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சுது. அந்த ப்ளாக்ல இவர் அப்ப்டி எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு தங்க கலர்ல மின்னிட்டு இருப்பார்.ஆனா உண்மைல பையன் கருப்புதான். இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்... ஹ்ம்ம்ம் இனி என்ன பண்றது? அதுக்கப்புறம் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" என்னோட காலர் ட்யூனாயிடுச்சு. அப்புறம் என்ன?
"ஜில்லுன்னு ஒரு காதல்" தான்....
21 comments:
பொய்யும் புரட்டும் வெகு நாள் நீடிக்காது!
சத்யமேவ ஜெயிலே!
”இப்போ நான் மஞ்சத் தமிழன்னு” பேக் ரவுண்ட் செட் பண்ணி இருக்கற நேரத்துல
என்னப் பாத்து கருப்புன்னு சொல்லிட்ட இல்ல!
நீ எப்பிடி பாலும் வெண்னையுமா தின்னு மைதா மாவு கலர்ல இருக்கியோ அதே மாதிரி நானும் தின்னு கலராகி காட்டல!
காட்டறேன்!
//அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல அழகாக இருப்பான்.//
இதெல்லாம் என்னான்னு கேக்க யாருமேயில்லையா!?
மொழுமொழுன்னு இருப்பாராம்ல, நாலு ரவுண்டுக்கு அப்புறம் தானே தெரியும் தலைவரை பத்தி!
// இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்.//
மஞ்சள் முக சந்தன தமிழனுக்கு இப்படி ஒரு அவமானமா!
சம்முவம் எட்றா வண்டிய, கூட்றா பஞ்சாயத்த!
//மொழுமொழுன்னு இருப்பாராம்ல, //
பின்ன! நான் மொழுமொழு தான!
//நாலு ரவுண்டுக்கு அப்புறம் தானே தெரியும் தலைவரை பத்தி!//
கொழந்தைனா வாந்தி எடுக்கறது ஒளறரதெல்லாம் சகஜம்தானே!
//சம்முவம் எட்றா வண்டிய, கூட்றா பஞ்சாயத்த!//
வழக்கு நடக்கற ஊட்டுல நான் வாய் கூட கொப்பளிக்கறதில்ல கண்ணு! வழக்கு முடியட்டும் வயிராற தின்னுட்டுப் போறேன்!
//நீ எப்பிடி பாலும் வெண்னையுமா தின்னு மைதா மாவு கலர்ல இருக்கியோ அதே மாதிரி நானும் தின்னு கலராகி காட்டல! //
நீங்க அப்படி இருந்தா கண் கொண்டு பார்க்க முடியுமாங்க? இப்போ இருக்கற அழகே போதும் எனக்கு
//மொழுமொழுன்னு இருப்பாராம்ல, நாலு ரவுண்டுக்கு அப்புறம் தானே தெரியும் தலைவரை பத்தி!//
அய்யய்யோ என்ன சொல்றீங்க வாலு! ஏங்க இவர் சொல்றதெல்லாம் உண்மையா?
//நீங்க அப்படி இருந்தா கண் கொண்டு பார்க்க முடியுமாங்க?//
மதுரைப்பொண்ணு கோவைப் பொண்ணுன்னு இதுக்கே கூட்டம் அம்முது!
//அய்யய்யோ என்ன சொல்றீங்க வாலு! ஏங்க இவர் சொல்றதெல்லாம் உண்மையா?//
இல்லடி செல்லக்குட்டி! அந்தாளு காம்பஸ்ல போடற ரவுண்டப் பத்தி சொல்றார்!
//மதுரைப்பொண்ணு கோவைப் பொண்ணுன்னு இதுக்கே கூட்டம் அம்முது! //
யார்யா அது கிராஸ் டாக்குல!
இது எங்க ஏரியா, மதுரை பக்கமெல்லாம் வரக்கூடாது சொல்லிட்டேன்!
//துவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. //
வராம பின்ன! கோவைய கோவாவாக்கறதே நம்ம பர்சனாலிட்டி தான!
//யார்யா அது கிராஸ் டாக்குல!
இது எங்க ஏரியா, மதுரை பக்கமெல்லாம் வரக்கூடாது சொல்லிட்டேன்!//
அதான் பயத்துல போங்காட்டம் ஆடி என்னத் தொரத்தியாச்சில்ல! அப்பறம் என்ன... அதுவுமில்லாம மதுரையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது
ஹலோ ஹலோ... இங்க நடக்கறது கிராஸ் டாக்கா இல்லை கான்பரன்ஸா?
Athu thaan uma enakum puriyala
Eppo paathalum vaaloda vaazkaila velayadarathe rajanuku velaiya pochu? Illa vaalu?
//Eppo paathalum vaaloda vaazkaila velayadarathe rajanuku velaiya pochu? Illa vaalu?//
ஆமாங்க, எப்போ பார்த்தாலும் எங்கூடவே வம்புக்கு வர்றார்!, கொஞ்சம் புத்தி சொல்லி வையுங்க, என்னால சமாளிக்க முடியல!
Naan paathukaren vaalu... Dondorry be aappy
@ராஜன்
@வால்
//
என்னடா சைக்கிள் கடையில யாருமே இல்லேனு பார்த்தேன்..
நடக்கட்டும்..நடக்கட்டும்..
தம்பிகளா இரண்டு ஓட்ட குத்திட்டு அப்பீடாயிக்கிறேன் ... வற்ட்டா :)
ok now i some waht belive Jack=Rajan right he is from coimbatore[wow my home town pa]
so nammuuru karainga poi solla mattaanga ok oru problem solved
but this jillu chennai ponnunu solluranga athuthaan doubtea
eanna athu thaan thalainagarm aachea oru payalavathu unmaiyai peasiirrukkana
emma jillu unmealla doubt illama unn unn unnoda ooru irrukillea ooru athuthaan konjam doubttu.
ok namma unmaiyin olivizaku reena aaka, arichandranin aduthau avathaaram thiru.vallpaiyan and nammurukaaru kongumandala blogergalin vidivelli thaanai thalaivar thri.rajan avargalin varthiku mathippu allithu inthe jillu and jack irruvaraiyum unmaieanndru oppukkolgirean.
Note:Jillu meala mattum innum doubt thoduruthu. [Jiillukiittea sollidatheeeeeeeeengoo.]
Post a Comment