Wednesday, June 9, 2010

கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,,ஜில்லுனு ஒரு காதல்

கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,,ஜில்லுனு ஒரு காதல்
கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,, ஒரு அழகான கிராமம்.எங்கே திரும்பினாலும் பச்சை வயல்கள்.சிறுவானி ஆறு சிலுசிலுனு ஓடும்.ஆத்தங்கரைல பொண்னுங்க எல்லாம் குளு குளுனு விளையாடும்.பழைய ஹைஸ்கூல்,அதுக்கு பின்னாடி போஸ்ட் ஆபீஸ்,அதுக்கு பின்னாடி நாட்டாமை வீடு,அந்த நாட்டாமைக்கு ஒரு அழகான பொண்னு,,,,,,



மேலே சொன்ன கிராமத்துக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.(!)நமக்கு கோயம்புத்தூர்....

ஆபீஸ் போனோமா, ஆனந்த விகடன் படிச்சமானு இல்லாம நெட்டுல கொஞ்சம் மேய ஆரம்பிச்சேன்...அப்ப ஒருநாள் வலையுலகைப் பத்தி கலைதாகத்துடன் சிந்தித்துக்கொண்டே அமர்ந்திருந்த பொழுது, அதில் ஒரு மிகப்பெரிய ஓட்டை இருப்பது தெரிய வந்தது( எதுல? அப்படின்னு இன்டீசன்டா கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.) அந்த இடத்தை FILL பண்ணதான் நான் கவிதையே உலகமா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சேன்.( தமிழ்நாட்லதான் பஸ்ல உக்காந்துட்டு பராக் பாக்கறவன் எல்லாத்துக்கும் கவித வருமே! அது மட்டும் இல்லாம கல்வீச்சு,சோடாபாட்டில் வீச்சு, முட்டை அடி, கண்டன பேரணி,உருவபொம்மை எரிப்பு போன்ற எந்த VIOLENCE ம் இல்லாம நம்ம இஷ்டப்படி கிறுக்க இதுதான் நல்ல இடம்னு தோணியதால கமிட் ஆயிட்டேன்...





அப்பறம் பத்து கவித (!) எழுதினதுக்கப்பறம் எப்படியோ மோப்பம் பிடிச்சு நம்ம ப்ளாக்குக்கு வந்தாங்க MISS ஜில்லு
நம்ம எழுத்தில மயங்கி (!!!!) ஏதேதோ கமெண்ட்லாம் போட்டாங்க...நாமளும் காட்டுப்பூனை கருவாட்டு பொட்டலத்த பார்த்த மாதிரி அம்மணியோட முகவரிக்குப் போய் "அட்டாக்" குடுத்தோம்.
சும்மா சொல்லக் கூடாதுங்க கத,கவித,விமர்சனம் பயணக்குறிப்பு,சுயசரிதைனு கேக்க ஆளில்லாததால இவ இஷ்டத்துக்கு விளையாடியிருக்கா!போனமா வந்தமானு இல்லாம நானும் வாய்க்கு வந்ததை எழுதி வைக்க பத்திகிச்சு! நெருப்பு...அப்பறம் என்ன? நான் எழுத அவ படிக்க!, அவ எழுத நான் படிக்க!(சரி மேட்டருக்கு வரேன்!)


ஒன் டே அம்மணியோட கருத்துரைய மதிப்பீடு செய்யலாம்னு ஓப்பன் பண்ணி பார்த்தா, ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, "ஏன் நீங்க திரட்டி, தமிழ்மணம்ல எல்லாம் உங்க ப்ளாக்க இணைக்கல?(நமக்குதான் விளம்பரமே பிடிக்காதே!) ஏதாவது உதவி தேவைனா கேளுங்கனு ஹெல்ப்லைன் ஈமெயில் ஐடி வேற!!! இதுல ஏதோ உள்குத்து இருக்குங்கறத கூட புரிஞ்சிக்க முடியாம ரொம்ப அப்பாவியா நானும் என்னோட மொபைல் நம்பர அவளுக்கு நம்பி அனுப்பி வெச்சேன்......




அடுத்த அஞ்சாவது நிமிஷம் "ஹாய்"னு ஒரு மெசேஜ்.
அப்பறம் என்ன "ஜில்லுனு ஒரு காதல்"

6 comments:

Jack said...

ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்!

Unknown said...

மீள்பதிவெல்லாம் செல்லாது செல்லாது, நாங்க முன்னாடியே படிச்சிட்டோம்

hiuhiuw said...

@கேவீஆர் ம்க்கும்! படிச்ச்சுட்டு எதானும் கமெண்டு போட்டாதானே! சும்மா விட்டா எங்களுக்கென்ன தெரியும் இப்பிடிதான் மறுபடி போடுவோம்

maruthamooran said...

////'ஜில்லுனு ஒரு காதல்'////

இப்படியெல்லாம் சொல்லப்படாது. வரி விலக்கு கிடைக்காது.

‘சில்லுனு ஒரு காதல்’ இப்படித்தான் எழுதவேணும் சரியா?


எவ்வளவு அதிஷ்டசாலி நீங்கள். வலை எழுத வந்தே செட்டிலாகி விட்டீர்கள் போல. எங்களுக்கு கால் கடுக்க திரிஞ்சாலும் ஒண்ணுமே மட்டுதில்ல.

நேசமித்ரன் said...

ம்ம் எஞ்சாய்
:)

கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்காம போயிடப் போறீங்க

மறக்காதீர்

வால்பையன் said...

அடடே!

அவுங்களா சொந்த செலவில் சூனியம் வச்சிகிட்டாங்கன்னு சொல்லுங்க!

இந்த கதையை வச்சு ஒரு சினிமா எடுப்போமா!