
Friday, June 18, 2010
ஆன்லைன் காதல் - போட்டோஷாப் ஜாக்கிரதை!

Monday, June 14, 2010
முன் தினம் பார்த்தேனே! ஹம்மிங்ஸ் ஆஃப் இண்டியா!

சரி விஷயத்துக்கு வருவோம். ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் அந்த மெயிலை ஓப்பன் செய்து கண்களும் வாயும் விரிய ஜொள்ளு வழிய பார்த்திருக்கும் நேரம் ஆஃபீஸ்பியூனும் பின்னாலிருந்து பார்த்து "யாரு சார் அந்த ஃபிகர்?' என்று மனசாட்சியில்லாமல் கேட்க, டீயும் ஃபில்டரும் வாங்கி தந்து அவன் வாயடைத்தது தனிக்கதை.புகைப்படத்தை பார்த்த பின்னும் நம்மிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாததால் கடுப்பான அம்மணி எப்படி கேக்கறதுன்னே தெரியாம கண்டபடி பினாத்திக் கொண்டிருந்த போது நமக்கோ பயங்கர குஜால். அதற்கு பிறகு "பப்லு(அம்மணியின் செல்லப்பெயராமாம்!!) நீ ஃபோட்டோல எல்லாம் அவ்ளோ நல்லா இருக்கறதேயில்லைடி"னு இவ ஃப்ரென்ட்ஸ் சொல்லுவாங்கனு இவளே சொன்னா. (அதாவது நேர்ல இவங்க சுஷ்மிதா சென்னுக்கு சுடிதார் போட்டு விட்டா மாதிரியே இருப்பாங்களாம்)ஆனால் அப்போ சொன்னதுக்கு ஒண்ணுமே சொல்லாம 'சரி போ'னு விட்டுட்டேன். (பின்னே!இன்னும் கரெக்ட் பண்ணலை இல்ல!)
நாம போட்ட கடலையில அம்மணி மனசில நம்ம இமேஜ் ஜிவ்வுன்னு ஏறிடுச்சு(வோடஃபோன் பில் நான்கு இலக்கங்களில் ஏறிடுச்சு. உஸ்ஸ்ஸ் அப்பா... ஒரு ஃபிகர் கரெக்ட் பண்ண எம்புட்டு கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு!!) பல தருணங்களில் தூண்டில் கேள்விகளில் நழுவியோடிய அம்மணி ஒரு நாள் தானாகவே கொதிக்கற மசாலாவில் குபீர்னு குதிச்சுட்டாங்க... அந்த எபிஸோடு நெக்ஸ்ட்டு. இது அவங்கப்பா கிளம்பற நேரம். ஒரு ரெண்டு மணிநேரமாவது காதல் பண்ணனும். ம்ம்ம் என்னடா காதல்னு கேக்கறீங்களா? (நீங்க கேக்கலனாலும் நாங்க இதசொல்லித்தான் போஸ்ட்ட முடிப்போம்)
அதாங்க
"ஜில்லுன்னு ஒரு காதல்"
Thursday, June 10, 2010
ஒரு நாயகன் உதயமாகிறான் -ஜில்லுனு ஒரு காதல்

Wednesday, June 9, 2010
கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,,ஜில்லுனு ஒரு காதல்
கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,, ஒரு அழகான கிராமம்.எங்கே திரும்பினாலும் பச்சை வயல்கள்.சிறுவானி ஆறு சிலுசிலுனு ஓடும்.ஆத்தங்கரைல பொண்னுங்க எல்லாம் குளு குளுனு விளையாடும்.பழைய ஹைஸ்கூல்,அதுக்கு பின்னாடி போஸ்ட் ஆபீஸ்,அதுக்கு பின்னாடி நாட்டாமை வீடு,அந்த நாட்டாமைக்கு ஒரு அழகான பொண்னு,,,,,,
மேலே சொன்ன கிராமத்துக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.(!)நமக்கு கோயம்புத்தூர்....
ஆபீஸ் போனோமா, ஆனந்த விகடன் படிச்சமானு இல்லாம நெட்டுல கொஞ்சம் மேய ஆரம்பிச்சேன்...அப்ப ஒருநாள் வலையுலகைப் பத்தி கலைதாகத்துடன் சிந்தித்துக்கொண்டே அமர்ந்திருந்த பொழுது, அதில் ஒரு மிகப்பெரிய ஓட்டை இருப்பது தெரிய வந்தது( எதுல? அப்படின்னு இன்டீசன்டா கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.) அந்த இடத்தை FILL பண்ணதான் நான் கவிதையே உலகமா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சேன்.( தமிழ்நாட்லதான் பஸ்ல உக்காந்துட்டு பராக் பாக்கறவன் எல்லாத்துக்கும் கவித வருமே! அது மட்டும் இல்லாம கல்வீச்சு,சோடாபாட்டில் வீச்சு, முட்டை அடி, கண்டன பேரணி,உருவபொம்மை எரிப்பு போன்ற எந்த VIOLENCE ம் இல்லாம நம்ம இஷ்டப்படி கிறுக்க இதுதான் நல்ல இடம்னு தோணியதால கமிட் ஆயிட்டேன்...
அப்பறம் பத்து கவித (!) எழுதினதுக்கப்பறம் எப்படியோ மோப்பம் பிடிச்சு நம்ம ப்ளாக்குக்கு வந்தாங்க MISS ஜில்லு
நம்ம எழுத்தில மயங்கி (!!!!) ஏதேதோ கமெண்ட்லாம் போட்டாங்க...நாமளும் காட்டுப்பூனை கருவாட்டு பொட்டலத்த பார்த்த மாதிரி அம்மணியோட முகவரிக்குப் போய் "அட்டாக்" குடுத்தோம்.
சும்மா சொல்லக் கூடாதுங்க கத,கவித,விமர்சனம் பயணக்குறிப்பு,சுயசரிதைனு கேக்க ஆளில்லாததால இவ இஷ்டத்துக்கு விளையாடியிருக்கா!போனமா வந்தமானு இல்லாம நானும் வாய்க்கு வந்ததை எழுதி வைக்க பத்திகிச்சு! நெருப்பு...அப்பறம் என்ன? நான் எழுத அவ படிக்க!, அவ எழுத நான் படிக்க!(சரி மேட்டருக்கு வரேன்!)
ஒன் டே அம்மணியோட கருத்துரைய மதிப்பீடு செய்யலாம்னு ஓப்பன் பண்ணி பார்த்தா, ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, "ஏன் நீங்க திரட்டி, தமிழ்மணம்ல எல்லாம் உங்க ப்ளாக்க இணைக்கல?(நமக்குதான் விளம்பரமே பிடிக்காதே!) ஏதாவது உதவி தேவைனா கேளுங்கனு ஹெல்ப்லைன் ஈமெயில் ஐடி வேற!!! இதுல ஏதோ உள்குத்து இருக்குங்கறத கூட புரிஞ்சிக்க முடியாம ரொம்ப அப்பாவியா நானும் என்னோட மொபைல் நம்பர அவளுக்கு நம்பி அனுப்பி வெச்சேன்......
அடுத்த அஞ்சாவது நிமிஷம் "ஹாய்"னு ஒரு மெசேஜ்.
அப்பறம் என்ன "ஜில்லுனு ஒரு காதல்"
Monday, June 7, 2010
ஜில்லுனு ஒரு காதல் - தலைவி கூற்று அறிமுகம்

Thursday, May 27, 2010
ஹீரோ என்ட்ரி ...

ரசிகர்களே (!),
ரசிகைகளே(!!!!!)
நான்தாங்க அந்த ஜாக்கு!
மேலே சொன்ன அந்த ரெண்டு வார்த்தைகளும் சத்தியமா உங்கள கடுப்பேத்த இல்லைங்க ....
இந்த அம்மணி பண்ற அளப்பரி தாங்க முடியாம தான் ...
இந்த பிரச்சனைய நாம அப்பறம் டீல் பண்ணலாம்....ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் பிளாக்கர் ல "இலக்கிய சேவை"! செய்துட்டு இருக்கறதால இப்போ லவ்வுக்குனு ஒரு தனி சேனல் !! ஆரம்பிச்சு இருக்கோம் ...அதை தவிர இந்த சூர்யா ,ஜோதிகா ஸ்டில்'கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது.... என்பதை அழுத்தமாகவும் , ஆணித்தரமாகவும் இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன் ...சூர்யா நம்ம ஊருக்காரர் அதனால அவர விடுங்க ....
இந்த jilla கரெக்ட் பண்ண ஆரம்பிச்ச புதுசுல எனக்கும் ஜோதிகாவை பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொல்லிட்டேனா ( சும்மா பிட்டு தான்! )நம்ம ஆளுக்கு வேற அடி மனசுல குட்டி(!) சோதிகா அப்பிடின்னு ஒரு நெனப்பு ....அதுல இருந்து அம்மணிக்கு எப்போ பாத்தாலும் "ஒரு ஊரில் அழகே உருவாய்"ஹம்மிங் கேக்க ஆரம்பிச்சுடுது......சரி .... இவ மரியா ஷரபோவா போட்டோ கூட போடட்டும் .....என்னையும் இந்த கூத்துல கோர்த்து விட்டு அராஜகம் பண்றா ...காதலிகளின் அட்டகாசங்களை வெகுஜன வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்பும் காதலர்கள் என்னோடு கைகோர்க்கலாம் ( காதலிகள் கூட !)பயப்படாதிங்க ... ஓட்டற வரைக்கும் ஓட்டிட்டு பின்னாடி புஜ்ஜி பப்பினு ஏதாவது சொல்லி சமாளிச்சிடலாம் ... ஐயோ ! போன் பண்றா ......பேசி முடிக்க விடிஞ்சுடும் ... இப்போதைக்கு அப்பீட்டு .....
Wednesday, May 26, 2010
ஜில்லுனு ஒரு காதல் அறிமுகம்

மற்றும்
ஜில்லு....
பி. கு : இதுக்கு எதுக்கு சூர்யா ஜோதிகா ஸ்டில்லுனு கடுப்பா இருக்கா? எல்லாம் ஒரு பெயர் பொருத்ததுக்கும் விளம்பரத்துக்கும் தான்.அதுவுமில்லாம அம்மணி ஆசப்பட்டுச்சேனு... விடுங்க விடுங்க... கண்டுக்காதிங்க